பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதவியிலிருந்து தொடர்ந்து மூத்த தலைவர்கள் ராஜிநாமா செய்து வரும் நிலையில், முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். அவருக்கு ஆதரவாக மாநிலப் பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ரா, மாநிலப் பொருளாளர், இரண்டு நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் ரசியா சுல்தானா என வரிசையாக அனைவரும் ராஜிநாமா செய்து வருவதால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இவர்களின் ராஜிநாமாவை கட்சியின் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனவும், விரைவில் பிரச்னைகள் பேசித் தீர்க்கப்படும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், பஞ்சாப் தலைமைச் செயலகத்தில் முதல்வர் சரண்ஜீத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில அமைச்சரவை மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


