சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியாவில் 5 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் ஏர்டெல் நிறுவனம்

2025ஆம் ஆண்டுக்குள், 80 நகரங்களில் தகவல் மையங்களை கட்டமைக்கும் வகையில் முதலீடு செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனத்தின் வணிக தலைமை நிர்வாகி அஜய் சிட்காரா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 செப்டம்பர் 2021, 12:08 pm

DIN

ஒரு காலத்தில், இந்தியாவில் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இயங்கிவந்தன. ஆனால், காலப்போக்கில் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகியவை மட்டுமே இயங்கிவருகின்றன.

வோடபோன் ஐடியா நிறுவனம் பல கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில், போட்டி என்பது ஏர்டெல், ஜியோ ஆகியவைக்கிடையேதான் சுருங்கியுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தகவல் மையங்களை விரிவுப்படுத்தும் வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் வணிக தலைமை நிர்வாகி அஜய் சிட்காரா கூறுகையில், "2025ஆம் ஆண்டுக்குள், 80 இந்திய நகரங்களில் தகவல் மையங்களை கட்டமைக்கும் வகையில் என்க்ஸ்ட்ரா நிறுவனம் முதலீடு செய்யும். இதன் மூலம், நிறுவப்பட்ட திறன் 400 மெகாவாட்டிற்கு மேல் மூன்று மடங்கு அதிகரிக்கும். தகவல் மையங்களுக்கு நல்ல தேவை உள்ளது. இது, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்க்ஸ்ட்ரா நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 10 பெரிய மற்றும் 120 சிறிய தகவல் மையங்களை இயக்கிவருகிறது. தகவல் மையங்களை அதிகரிப்பதன் மூலம் வருவாயை பெருக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகள் இலவச வாய்ஸ் காலை அளித்து போட்டியை அதிக்கப்படுத்திய நிலையில், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கார்லைன் என்ற அமெரிக்க தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனம், என்க்ஸ்ட்ரா நிறுவனத்தின் 25% பங்குகளை கடந்தாண்டு வாங்கியது. இருப்பினும், இந்நிறுவனத்தின் 75% பங்குகளை ஏர்டெலே வைத்துள்ளது. 

ஏர்டெல் நிறுவனத்தின் போட்டியாளராக கருதப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, 2019 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி அமைத்து இந்தியா முழுவதும் தகவல் மையங்களை உருவாக்கியது. இந்தாண்டு 5ஜி சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதால், அதன் சலுகைகளை அதிகரிக்க கூகுள் உடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.