6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.

News image
‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்
Updated On :30 செப்டம்பர் 2021, 2:24 pm

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான லூயிசினோ ஃபெலேரோ புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி புதிய முகங்களை வேட்பாளர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 40 தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வரமுடியாது எனவும் தெரிவித்தார்.

கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் கட்சிகளும் தற்போது போட்டியில் இணைந்துள்ளது அரசியல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.