மகாராஷ்டிரத்தில் 61% அதிதீவிர கரோனா: ஆய்வில் தகவல்

மகாராஷ்டிரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவிகிதம் அதிதீவிர கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
மகாராஷ்டிரத்தில் 61% அதிதீவிர கரோனா: ஆய்வில் தகவல்

மகாராஷ்டிரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவிகிதம் அதிதீவிர கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிதீவிர கரோனா தொற்றுக்காக மத்திய அரசிடம் இருந்து எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளையும் இதுவரை பெறவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புணேவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால இடைவெளியில் பரிசோதனை செய்யப்படும் 361 மாதிரிகளில் 220 மாதிரிகளுக்கு அதிதீவிர கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் மீண்டும் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதிதீவிர கரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிதீவிர கரோனாவை கண்டறிய சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் தரப்படவில்லை என்றும், பழைய முறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com