மகாராஷ்டிரத்தில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. எனினும் மகாராஷ்டிரத்தில் நாட்டிலேயே அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,93,042 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

இதில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கையாள்வது, கரோனா மேலும் பரவாமல் தடுப்பது, வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கண்டறிந்து அனுப்பிவைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com