புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை(ஆக.3) ஆலோசனை

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2021, 8:54 am

பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த 10 நாள்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், இந்த ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் பங்கேற்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.