எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 11 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்
இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்கவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர். முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மக்களவையில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

