தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.
இதன்பிறகு, ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய கொடி ஏற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.
முன்னதாக, தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய் குமார் உள்ளிட்டோர் செங்கோட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...