
கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 53,345 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 38 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி கூடாது'
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25,073 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 471 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 1,56,217 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி எண்ணிக்கை 1,10,110. இரண்டாவது தவணை தடுப்பூசி 46,107.
இதுவரை மொத்தம் 1,16,59,932 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் 83,47,205 பேர். இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள் 33,12,727 பேர்.