ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 4:02 pm

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகள் மாலை வெளியாகின. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,955 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

இதில் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 1,01,704 பேர். இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 36,251 பேர்.

தில்லியில் இதுவரை மொத்தம் 1,19,55,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 85,63,920. இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் 33,91,278 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 69,160 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 25 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.