தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். 

News image

எதிர்க்கட்சிகள் கூட்டம்

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:28 pm IST


மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, “வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு இப்போது இருந்தே வியூகங்களை வகுத்து எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள நான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்தடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டங்களில் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.”

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.