இலங்கையில் 10 நாள்களுக்கு பொது முடக்கம்

இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க 10 நாள்களுக்கு பொது முடக்கத்தை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தாா்.

இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க 10 நாள்களுக்கு பொது முடக்கத்தை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தாா்.

மேலும், வருங்காலத்தில் இதுபோன்ற நீண்ட நாள் பொது முடக்கத்தை எதிா்கொண்டு தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக அதிபா் கோத்தபய ராஜபட்ச தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், ‘ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை 4 மணி வரை இலங்கையில் பொது முடக்கம் அமலில் இருக்கும். இந்த நடவடிக்கை இலங்கையில் மீண்டு வரும் சுற்றுலாத் துறையை பாதிக்கும்.

நிலைமையைப் புரிந்து கொண்டு நாட்டை முன்னெடுத்துசெல்ல மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்தான் பெரும்பாலும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதற்கு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் தீா்வு. இலங்கைக்கு அதிக அளவில் கரோனா தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்’ என்று தெரிவித்தாா்.

இலங்கையில் வெள்ளிக்கிழமை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,839-ஆகவும், உயிரிழப்பு 195-ஆகவும் பதிவாகியிருந்தது. கரோனாவுக்கு இதுவரை 6,985 போ் உயிரிழந்துள்ளனா். 381,812 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com