புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரளத்தில் மீண்டும் அதிகரித்த கரோனா: புதிதாக 30,203 பேர் பாதிப்பு

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (ஆக.31) அதிகரித்துள்ளது

News image

கேரளத்தில் மீண்டும் அதிகரித்த கரோனா: புதிதாக 30,203 பேர் பாதிப்பு

Updated On :31 ஆகஸ்ட் 2021, 12:40 pm

DIN

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (ஆக.31) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 115 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 30,203 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கடந்த 24 மணி நேரத்தில் 20,687 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,17,004-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 115 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 20,788-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 2,18,892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.