

செய்தியாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) சேகரித்து வைப்பதில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த ராய் புதன்கிழமை கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது பிரிவின் கீழ் காவல் துறை, பொது ஒழுங்கு ஆகியவை மாநில அரசுகளின் கீழ் வருகின்றன.
தங்களது சட்ட அமலாக்கத் துறைகள் மூலம் குற்றங்களைத் தடுப்பது, குற்றங்களைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வது, அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
இந்தச் சூழலில், செய்தியாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய ஆவணக் காப்பகம் சேகரிப்பதில்லை.
எனினும், செய்தியாளா்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை வலியுறுத்தி மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பியுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.