நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேர் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 91 நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் 101 பேருக்கு ஒமைக்ரான் உறுதி: மத்திய சுகாதாரத்துறை
இந்நிலையில் நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரத்தில் 32 பேரும், அதனைத் தொடர்ந்து தில்லியில் 22 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகத்தில் 8 பேரும், தெலங்கானாவில் 8 பேரும் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பள்ளி விபத்துக்கு காரணம் என்ன? நெல்லை ஆட்சியர் விளக்கம்
மேலும் குஜராத்தில் 5 பேரும், கேரளத்தில் 5 பேரும், ஆந்திரம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் முறையே தலா ஒருவரும் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”Vijay பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்!” அண்ணாமலை பேட்டி | BJP | TVK

புதுவை தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குச்சாவடி பற்றி அறிய!

9 கோல்களை தடுத்த 40 வயது கோல்கீப்பர்: ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பயர்ன் மியூனிக்!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


