
ம.பி: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
மத்தியபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சஹதார்பூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
பின் இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் 10 மணி போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை 1 மணிக்கு பத்திரமாக மீட்டனர்.
80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் 15-வது அடியில் குழந்தை சிக்கியிருந்ததாகவும் ஆக்ஸிஜன் வசதி அளிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | தேர்தலை எதிர்நோக்கியுள்ள பாஜக; மோடிக்கு சவாலாக மாறும் புதிய வாக்கு வங்கி
10 घंटे चला रेस्क्यू ऑपरेशन
— Collector Chhatarpur (@collchhatarpur) December 16, 2021
बच्ची दिव्यांशी को उपचार के लिए एम्बुलेंस द्वारा जिला चिकत्सालय डॉ टीम के साथ भेजा गया। साथ में माता पिता भी आये।
परिजनों और लोगों के चेहरों पर छाई खुशियाँ..
रात्रि 12:47 बजे बच्ची को बोरवेल से रेस्क्यू टीम के दल द्वारा निकाला गया।@CMMadhyaPradesh pic.twitter.com/zc6jX2pBp4