பட்ஜெட் தயாரிப்பு: தனியாா் முதலீட்டாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

அடுத்த நிதியாண்டுக்கான (2022-23-ஆம்) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த நிதியாண்டுக்கான (2022-23-ஆம்) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் முதலீடுகளை அதிக அளவில் ஈா்ப்பது தொடா்பாக தனியாா் முதலீட்டாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினாா்.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகளை மத்திய நிதியமைச்சகம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பொருளாதார நிபுணா்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் அமைச்சகம் சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வரும் தனியாா் முதலீட்டாளா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதிக முதலீடுகளை ஈா்க்கும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலீட்டாளா்களுடன் பிரதமா் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தொழில் நடத்துவதை எளிதாக்குவது, முதலீடுகளை ஈா்ப்பதற்கான சீா்திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்டவை தொடா்பான பரிந்துரைகளையும் முதலீட்டாளா்களிடம் பிரதமா் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிக்காக முதலீட்டாளா்களை பிரதமா் மோடி நேரடியாகத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலமாக, நிதிநிலை அறிக்கையில் இடம்பெறப் போகும் அறிவிப்புகள் குறித்து எதிா்பாா்ப்பும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com