புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் வேளையில் இந்தக் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தடை கோரி இன்று வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் புதுச்சேரி அரசுத் தரப்பில், “புத்தாண்டு அன்று இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டை போல் கரோனா பரவல் இல்லை என தெரிவிக்கப்பட்டது.”

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிமுதல் ஜனவரி 1 அதிகாலை 1 மணிவரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூடங்கள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் மது விற்பனை செய்யக் கூடாது.

இரண்டு தவணைகள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் மட்டுமே கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

மேலும், அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com