ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான 37% வெளிநாடு செல்லாதவர்கள்; வெளியான திடுக்கிடும் தகவல்

இதில், கவனிக்க வேண்டிய ஒன்று, அவர்கள் யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்களாவர். மொத்தம் 375 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 141 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் ஒமைக்ரான கரோனா வேகமாக பரவிவருகிறது. பல வாரங்களுக்குப் பின்னர் நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் தாண்டியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் குறித்து மும்பை மாநகராட்சி சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 22 தேதிகளில் கரோனா பாதிப்பு உறுதியான மும்பைவாசிகளில் 37 சதவிகிதத்தினருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில், கவனிக்க வேண்டிய ஒன்று, அவர்கள் யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்களாவர். மொத்தம் 375 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 141 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, மும்பையில் மட்டும் மொத்தம் 153 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 12 பேர் மட்டும் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மற்ற 141 பேர் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள். மேலும், இந்த 141 பேரில், 93 பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர். 7 பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. 39 பேருக்கு லேசான அறிகுறிகளும் 7 பேருக்குச் சற்று தீவிரமான அறிகுறிகளும் உள்ளன.

இது ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதைக் குறிப்பதாக சில சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல தில்லியிலும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத 25 பேருக்கு ஒமைக்ரான் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com