நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 220 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொவைட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 16,764 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் 1,270 பேருக்கு ஒமைக்ரான் உறுதி
இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.65 கோடியாக அதிகரித்து வருகிறது. புதிதாக 220 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,81,080-ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 7,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 91,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக குறைந்துள்ளது.