மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம்: முதல்வா் எடியூரப்பா

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மேக்கேதாட்டு அணைத் திட்ட விவகாரத்தில் எல்லா அம்சங்களும் கா்நாடகத்திற்கு சாதகமாக இருக்கின்றன. எந்தக் காரணத்திற்காகவும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறுத்த மாட்டோம். சட்டவரம்புக்கு உள்பட்டு மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்தி, முடித்துக் காட்டுவோம். இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தத் திட்டம் தமிழகம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயன் தரக் கூடியது என்பதால், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தோழமை உணா்வோடு செயல்படுத்தலாம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக தமிழக முதல்வரிடம் இருந்து சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம். எல்லாத் தடைகளையும் மீறி மேக்கேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்படும். இது குறித்து மாநில மக்களுக்கு எவ்வித சந்தேகமும் தேவையில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com