மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்: 43 பேர் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்
மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

அமைச்சரவைப் பட்டியல் 

1.நாராயண் தாட்டு ரானே
2.சர்பானந்த சோனோவால்
3..விரேந்திர குமார்
4.ஜோதிராதித்ய சிந்தியா
5.ராமசந்திர பிரசாத் சிங்
6.அஸ்வினி வைஸ்னவ்
7.பசுபதி குமாா் பராஸ்
8.கிரண் ரிஜிஜு
9.ராஜ் குமார் சிங்
10.ஹர்தீப் சிங் புரி
11.மன்சுக் மாண்டவியா
12.பூபேந்தர் யாதவ்
13.புருசோத்தமன் ரூபலா
14.கிஷண் ரெட்டி
15.அனுராக் சிங் தாக்குர்
16.பன்கஜ் செளத்ரி
17.அனுப்ரியா சிங் படேல்
18.சத்ய பால் சிங் பாகேல்
19.ராஜீவ் சந்திரசேகர்
20.ஷோபா கரண்ட்லஜே
21.பானு பிரதாப் சிங் வர்மா
22.தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ்
23.மீனாக்ஷி லேகி
24.அன்னபூர்னா தேவி
25.ஏ. நாராயணசுவாமி
26.கௌசல் கிஷோர்
27.அஜய் பாத்
28.பி.எல். வெர்மா
29.அஜய் குமார்
30.சௌஹான் தேவுசின்
31.பகவாந்த் குபா
32.கபில் மோரேஷ்வர் பாட்டீல்
33.பிரதிமா பௌமிக்
34.சுபாஷ் சர்கார்
35.பகவத் கிஷன்காவ் காரத்
36.ராஜ்குமார் ரஞ்சன் சிங்
37.பாரதி பிரவீன் பவார்
38.விஸ்வேஷ்வர் துடு
39.ஷாந்தனு தாக்குர்
40.முன்ஜபாரா மஹேந்திரபாய்
41.ஜான் பார்லா
42.எல். முருகன்
43.நிசித் பிராமனிக்

குடியரசுத் தலைவர் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு 43 பேரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது.  ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. 

பிகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி போன்றோர் காலமானது, மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது உள்ளிட்டவற்றால் அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. 

இதனால் தற்போது மத்திய அமைச்சரவையில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த பொறுப்புகளை வகித்துவருகின்றனர். 

தில்லியில் பாஜக தலைவர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com