'பாகிஸ்தான் எல்லையில் 61 ட்ரோன்கள், 4 சுரங்கங்கள் கண்டுபிடிப்பு'

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 61 டிரோன்களும் 4 சுரங்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 61 ட்ரோன்களும் 4 சுரங்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார். 

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவில் பேசிய ராகேஷ் அஸ்தானா, ''இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 61 ட்ரோன்கள் மற்றும் 4 சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவிய 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.2,786 மதிப்பிலான 633 கிலோ போதைப் பொருள்கள், 55 ஆயுதங்கள், 4,233 வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியா - வங்கதேச எல்லையில் 12,821 கிலோ போதைப் பொருள்கள், 61 ஆயுதங்கள் மற்றும் 7,976 வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,984 பேர் தடுக்கப்பட்டுள்ளனர்'' என்றார். 

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''தீவிரவாத ஊடுருவல், ஆள்கடத்தல், போதைப்பொருள், பசு கடத்தல், சுரங்கம், ட்ரோன் ஆகியவை இந்தியாவிற்கு மிகப்பெரிய சவலாக இருக்கிறது. ஆனால் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.

தேசியப் பாதுகாப்பு படையினர் சுரங்கப் பாதைகளை மட்டுமல்லாமல், அதன் உருவாக்கம், மற்றும் அதன் வழியாக வந்தவர்கள் ஆகியவை குறித்து தடவியல் ஆய்வையும் மேற்கொள்கின்றனர். இந்திய எல்லை வழியாக சுரங்கங்கள் அமைக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும். புதிய வேலிகள் அமைக்கவிருக்கிறோம்'' என்றார் அமித் ஷா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com