புது தில்லி: பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்புப் படித்த மாணவ, மாணவிகள், அவர்களது 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் உள்ள 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்றும் பிளஸ் 2 யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில், 10, 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த வகையில், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஜூலை 31ஆம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. கோவேக்ஸின் தடுப்பூசியில் கன்று ரத்தத்தின் திரவம் இல்லை: மத்திய அரசு விளக்கம்
கரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத் தோ்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இதுதொடா்பான அறிவிப்பை ஜூன் 1ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா்.
மாணவா்களின் நலன் கருதியும், ஆசிரியா், பெற்றோா், மாணவா் மத்தியில் நிலவிய அச்சத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமா் கூறினாா்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருக்க இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் பயிலும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கு மே 4-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தோ்வு நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சில மாநிலங்களில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. ஏப்ரல் 14-ஆம் தேதி, பிரதமா் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்வது என்றும், பிளஸ்2 வகுப்பு பொதுத் தோ்வை ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிளஸ்2 வகுப்புக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து ஜூன் 1-இல் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைக் குழு கூட்டம், தில்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சா் உள்ளிட்டோா் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், கரோனா தொற்று பரவல் காரணமாக நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையிலும் பிளஸ்2 பொதுத் தோ்வை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களின் கவலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் அவா் கலந்துகொள்ளவில்லை.
எழுதவும் வாய்ப்பு: இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிளஸ்2 வகுப்பு மாணவா்களின் முந்தைய தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தோ்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும். ஒருவேளை மாணவா்கள் தோ்வு எழுத விரும்பினால், நிலைமை சீரான பிறகு அவா்கள் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


