திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் 48% பேர்..? (இது ஒரு ஆய்வின் முடிவு)

பொதுவாக நடத்தை என்றாலே அதை எளிதில் மீறுவோர் என்று ஆண்களை சொல்வார்கள்.
திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் 48% பேர்..? (இது ஒரு ஆய்வின் முடிவு)
திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் 48% பேர்..? (இது ஒரு ஆய்வின் முடிவு)


ஹைதராபாத்: பொதுவாக நடத்தை என்றாலே அதை எளிதில் மீறுவோர் என்று ஆண்களை சொல்வார்கள். நமது அடிப்படை அமைப்பே ஒழுக்கம் என்பதை பெண்களுக்கு  கட்டாயமாக்கி வளர்த்து வந்திருப்பதும், அதைப் பெண்கள் கட்டாயமாக பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையும், பின்பற்றியே ஆக வேண்டும் என்ற நினைப்பும் கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால், தற்போதைய நவ நாகரீக உலகில், இந்த கட்டமைப்புகளைத் தகர்த்தெறிய அனைத்துக்கும் காரணமாகக் கூறப்படும் செல்லிடப்பேசியும், மாறிவரும் வாழ்க்கை முறையும் அப்பாவியாக பலிகடாவாகி வருகின்றன.

இந்த நிலையில்தான் பெண்களின் திருமணத்தை மீறிய உறவு குறித்த ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் இணையதளமான க்ளீடன், (இந்தியாவில் மட்டும் இதற்கு சுமார் 10 லட்சம் பயனாளர்கள் உள்ளனர்) ஒரு ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில், திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் பெண்களில் சுமார் 48 சதவீதம் இந்தியப் பெண்கள், தாய்மார்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த ஆய்வில் சுமார் 30 முதல் 60 வயதுடைய பெண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சுமார் 78 சதவீதம் பேர் நன்கு படிப்பறிவு கொணடவர்கள், 74 சதவீதம் பேர் நல்ல பணியில் இருப்பவர்கள். பெண்கள் தங்களது பொருளாதார சுதந்திரத்தின் காரணமாக, கணவரின் மீது ஏற்படும் அதிருப்திகளால் மனமுடைந்து, எப்போதும் அழுது வடிந்து கொண்டிருக்காமல், தங்களது மனம் விரும்பும் வாழ்க்கை முறையை தேர்வு செய்து கொள்ள காரணமாகியுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பல பெண்களும் தங்களது வாழ்க்கையில் ஆச்சரியம், சந்தோஷம் போன்றவை நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புவதும் கூறப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கும் பெண்களில் பலரும், அதற்குக் காரணமாக, தங்களை விட தங்கள் கணவர்கள் பார்க்க சுமாராக இருப்பதையே முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனராம். மேலும் பல பெண்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாங்கள் செய்வதை நியாயப்படுத்தியுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நாகரீகக் காலத்தில் ஏராளமான பெண்கள், தங்களை ஏதோ வீட்டை பராமரிக்கும் வெறும் இயந்திரமாக கணவன்மார்கள் பார்ப்பதை விரும்பவில்லை, தங்களுக்கும் உணர்வுகள், ஆசைகள் இருக்கிறது, தங்களும் சக மனிதராக மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது தங்களது வீட்டுக்குள் கிடைக்காததால் வெளியில் தேடுகிறார்கள். நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அது வெளியில் கிடைக்கும் போது அதை நாடிச் செல்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சமீபத்தில் டிக்டாக் செயலியால், ஏராளமான குடும்பப் பெண்கள் விடியோ வெளியிட்டு பல வகைகளில் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சிக்கலை சந்தித்து, அதனால் அந்த செயலியே இந்தியாவில் தடை செய்யப்பட்டதும், இதுபோன்ற ஒரு காரணத்தால்தானோ என்றும் மக்கள் கருதுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com