மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எல்.கே.அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து

பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :8 நவம்பர் 2021, 7:51 am

DIN

பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானி இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் கொண்டாடினர். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மரியாதைக்குரிய அத்வானி ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாசாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக இந்த நாடு அவருக்குக் கடன்பட்டிருக்கிறது. தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் அனைவராலும் மதிக்கப்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.