கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மம்தா பானர்ஜியுடன் சஞ்சய் ரௌத், ஆதித்ய தாக்கரே சந்திப்பு

​சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 12:35 pm

DIN


சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் மற்றும் மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான ஆதித்ய தாக்கரே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மும்பையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ஆதித்ய தாக்கரே கூறியது:

"அவரை (மம்தா) மும்பைக்கும், மகாராஷ்டிரத்துக்கும் நாங்கள் வரவேற்றோம். எப்போதுமே நட்பு இருந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை வந்தபோதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம். ஆனால், அவரை மும்பைக்கு வரவேற்பதற்காகவே வந்தோம்."

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.