மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? - ராகுல் காந்தி கேள்வி

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் முற்றிலும் இரு அவைகளும் முடங்கின. அவையின் மாண்பை சீா்குலைத்த எம்.பி.க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவா்கள் தெரிவித்திருந்தனா். 

இதையடுத்து நேற்று தொடங்கிய குளிா்கால கூட்டத்தொடரில் இருந்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் திங்கள்கிழமை அறிவித்தாா்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

எனினும், இந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கோரினால் பரிசீலனை செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். 

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து, 'நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பா? முடியவே முடியாது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com