புது தில்லி: நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
நாட்டுக்குள் உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் நுழையாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
சர்வதேச அளவில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதிலிருந்து சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. துறைமுகங்களிலும் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மரபணு வரிசைமுறையை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்: மருத்துவர்
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் தற்போது வரை 14 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கிறது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


