வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மன்மோகன் சிங் எய்ம்ஸில் அனுமதி: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குணமடைய வேண்டும் என மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Updated On :14 அக்டோபர் 2021, 5:22 am

DIN

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வழக்கமான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செயலாளா் பிரணவ் ஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 89 வயதான மன்மோகன் சிங் ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.