
மத்திய உள்துறை அமித்ஷா
தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரண்டு நாள் பயணமாக அக்டோபர் 23ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீருக்கு செல்கிறார்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலர் பலியாகியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களின் எதிர் தாக்குதலில் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக அக்.23ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது விமானப்படை, ராணுவப்படை மற்றும் மத்திய ஆயுதப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.