மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நûடùபற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது "நாரதா நியூஸ்' என்ற செய்தித் தளம், சில விடியோக்களை வெளியிட்டது. அதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களைப் போன்ற தோற்றமுடையவர்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட அதன் நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், கடந்த 2017-இல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.