பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பை ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், "இது கட்சி மேலிடத்தின் முடிவு. இதை நான் வரவேற்கிறேன். சன்னி எனது இளைய சகோதரரைப் போல. அதனால், நான் ஏமாற்றமடையவில்லை." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


