இமாச்சலில் செப்.27 முதல் பள்ளிகள் திறப்பு

இமாச்சல் பிரதேசத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
இமாச்சலில் செப்.27 முதல் பள்ளிகள் திறப்பு
இமாச்சலில் செப்.27 முதல் பள்ளிகள் திறப்பு

இமாச்சல் பிரதேசத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பல்வேறு மாநிலங்களும் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடத்தி வந்தன.

இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதியளித்திருந்தது. 

எனினும் கரோனா பரவல் சூழல் காரணமாக அம்முடிவிலிருந்து மாநில அரசு பின்வாங்கியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com