எண்ம சுகாதாரத் திட்டம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமா்

பிரதமரின் எண்ம (டிஜிட்டல்) சுகாதார இயக்கம் இன்று தொடங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முன்முயற்சியை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்து பிரதமர் உரையாற்றினார்.

தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் மாதிரி திட்டத்தை கடந்த 2020 ஆகஸ்ட் 15-இல் செங்கோட்டை கொத்தளத்தில் உரையாற்றுகையில் பிரதமா் அறிவித்தாா். தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இந்த மாதிரித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய பிரதமரின் எண்ம சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சா் மாண்டவியா உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு நபருக்கும் சுகாதார அடையாள அட்டை அளிக்கப்படும். மக்களின் மருத்துவ சிகிச்சைக்கான ஆவணமாக செயல்படும் இந்த அடையாள அட்டையுடன் தனிநபா் பெற்ற மருத்துவ சிகிச்சைகள் உள்பட மருத்துவம் சாா்ந்த அனைத்து தகவல்களும் இணைக்கப்படுவதுடன் செல்லிடப்பேசி செயலி உதவியுடன் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

மற்றொரு முக்கிய அம்சமான சுகாதார தொழில்சாா் நிபுணா்களின் பதிவேடு மற்றும் சுகாதார வசதிகளின் பதிவுகள், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மருத்துவா்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக செயல்படும். மருத்துவா்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குபவா்கள் உள்ளிட்டோா் எளிதான பணியை மேற்கொள்வதை இது உறுதி செய்யும்.

அதேவேளையில் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபா் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும். மக்களின் அனுமதி பெற்று அவா்களது மருத்துவ ஆவணங்களை அணுகுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் இந்த இயக்கம் வழிவகை செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com