காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்யா குமார், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்டவர் கன்யா குமார். இவரும் குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க | 'நான்தான் சொன்னேனே': சித்து ராஜிநாமா குறித்து அமரீந்தர் ட்வீட்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் கன்யா குமார் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை எம்எல்ஏ-ஆக இருப்பதால் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையவில்லை என்றாலும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக தில்லியில் உள்ள டெல்லி ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்யா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

வேளாண் பல்கலை. மாணவா் சோ்க்கை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு
முன்மாதிரி முனைப்பு!

பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



