உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; தொடர் நெருக்கடியில் மக்கள்

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.64 ரூபாயாகவும் மும்பையில் லிட்டருக்கு 107.71 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல், டீசல் விலை இன்று நாடு முழுவதும் உச்சத்தை தொட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 30 பைசா உயர்த்தப்பட்ட நிலையில், 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசா உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தில்லியில் 101.64 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 107.71 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. டீசலை பொறுத்தவரையில், தில்லியில் 89.87 ரூபாய்க்கும் மும்பையில் 97.52 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. 

உள்ளூர் வரி விகிதத்தைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள் விலை மாறுபடும். மூன்றே வாரத்தில் பெட்ரோல் விலை இரண்டாவது முறையாகவும் டீசல் விலை ஐந்தாவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வின் மூலம் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டெல்லியில் ஜூலை மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 101.84 ரூபாயாகவும் மும்பையில் 107.83 ரூபாயாகவும் இருந்தது. 

மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, சர்வதேச எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 78.64 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (பிபிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ஆகியவை பெட்ரோல், டீசல் விலைகளை செப்டம்பர் 24ஆம் தேதி மாற்றியமைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com