சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

News image
பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
Updated On :1 ஏப்ரல் 2022, 12:42 pm

DIN


புது தில்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

அரசுமுறைப் பயணமாக புது தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து இன்று மாலை ரயில்வே அமைச்சர்  பியூஷ் கோயலை சந்தித்துப் பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழக நலன்கள் தொடர்புடைய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினார்.

இன்று காலை நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்ட பிறகு, தில்லி அரசுப் பள்ளி மற்றும் தில்லி அரசு மொஹலா கிளினிக்கை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.