புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் (எம்எஸ்ஐ), 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இதுவரை இல்லாத வகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை ஏற்றுமதி செய்திருப்பதாகவும், மாருதி சுஸுகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இதைச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டதா?
காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி இது குறித்துப் பேசுகையில், இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது என்றார்.
ஹிஷாசி டாக்யூச்சி
நிறுவனத்தின் நிா்வாக இயக்குநர் (எம்டி) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த கெனிச்சி அயூகவாவின் பதவிக் காலம் 2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையொட்டி, மாருதி சுஸுகியின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹிஷாசி டாக்யூச்சி நியமிக்கப்பட்டார். 2022 ஏப்ரல் 1 முதல் இவரது நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


