குஜராத்தில் எலுமிச்சை பழம் விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வரத்து பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ராஜ்கோட் (குஜராத்): கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வரத்து பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.

ரூ50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது கிலோ ரூ.200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எலுமிச்சை பழத்தின் விலை கிலோ ரூ.200-ஐ தொட்டது. முன்பு கிலோ ரூ.50 முதல் ரூ.60-ஆக இருந்தது. 

வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​மக்கள் தங்கள் உணவில் எலுமிச்சையை சேர்க்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வைட்டமின் சி  அதிகமாக உள்ளது. மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. எலுமிச்சை பழம் வரத்து குறைவால் எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

எலுமிச்சை பழம் திடீர் விலை ஏற்றத்தால் குறைந்த அளவிலேயே வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதால், விலை ஏற்றம் வியாபாரிகளையும் பாதித்துள்ளது. விலை உயர்வால் வியாபாரிகள் மற்றும் வாங்குபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com