பெத்தாசமுத்திரம் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வருவாய் ஆய்வாளர் உள்பட இருவர் பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சத்தியராஜ் (38). இவர் வேளாண்மை படிப்பு (அக்ரி) முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் வெள்ளிக்கிழமை இரவு பணிமுடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் பெரியசாமி (46) கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவரை தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
இருவரும் இருசக்கர வாகனத்தில் சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் அருகே தரணி தோட்டம் பிரிவுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைத் தடுமாறி இருவரும் கீழே விழுந்து விட்டனர்.
அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்ட போது அதில் சத்தியராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. பெரியசாமியை 108 அவசர ஊர்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த போது பெரியசாமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Summary
Two people, including a revenue inspector, were killed when a two-wheeler crashed into a tipper lorry parked near Bethasamuthiram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

பண்ருட்டி: டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்து! 4 பேர் பலி
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




