காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் மேக்கேதாட்டு திட்டம் குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தில்லி சென்று தில்லியில் மேக்கேதாட்டு திட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறினார்.

News image

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை(கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2022, 9:33 am

DIN

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தில்லி சென்று  மேக்கேதாட்டு திட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறினார்.

தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பொம்மை, முக்கியமாக நீர் மற்றும் நதிகள் இணைப்பு பிரச்னைகள் குறித்து விவாதிக்க நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக அவர் தனது நிகழ்ச்சி நிரலில் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: 

"இன்று நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க தில்லி செல்கிறேன். மேகதாது, மகதாயி, கிருஷ்ணா நதிகள் மற்றும் இதர திட்டங்களில் பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. எனவே, அந்த திட்டங்கள் அனைத்தையும் விவாதித்து விரைவில் அனுமதி பெற முயற்சிப்பேன்" என்றார் பொம்மை.

மேகதாது திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றுப்படுகையின் குறுக்கே சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் 22 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்திற்குப் பிறகு கர்நாடக மாநில அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.