திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை

பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

News image
பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை
Updated On :5 ஏப்ரல் 2022, 5:18 am

DIN

பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் மற்றும் அலுவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் செய்து வரும் அமளி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.