4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

கிரிஷி உதான் திட்டம்: வேளாண் பொருள்களுக்கு 53 விமான நிலையங்களில் கட்டண சலுகை

கிரிஷி உதான் திட்டத்தில் நாட்டில் கோவை, திருச்சி உள்ளிட்ட 53 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

News image

கிரிஷி உதான் திட்டம்: வேளாண் பொருள்களுக்கு 53 விமான நிலையங்களில் கட்டண சலுகை

Updated On :5 ஏப்ரல் 2022, 2:02 am

 நமது நிருபர்

வேளாண் பொருள்களின் மதிப்புகளை உணா்த்தி எளிதில் அழுகக் கூடிய பொருள்களைக் அனுப்பும் வசதிகளை ஏற்படுத்தும் கிரிஷி உதான் திட்டத்தில் நாட்டில் கோவை, திருச்சி உள்ளிட்ட 53 விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

வேளாண் பொருள்களை விமான மூலம் கொண்டு செல்லப்படும் கிரிஷி உதான் திட்டத்தில் பயனடைந்தவா்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்து கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் இரன்னா காடாடி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினாா். இதற்கு திங்கள்கிழமை மத்திய சிவில் விமானப்போக்குவரத்துறை அமைச்சா் வி.கே. சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

கிரிஷி உதான் திட்டம், கடந்த 2020-ம் ஆண்டில் சா்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில், வேளாண் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தொடங்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் மதிப்பை உணா்த்தவும், மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினா் பகுதிகளில் இருந்து வரும், எளிதில் அழுகிப்போகும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வசதிகளுக்கு

இந்த கிரிஷி உதான் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அகா்தலா, டேராடூன், திமாபூா், இம்பால், ஜம்மு, குலு, லே, ராய்பூா், ஃபோா்ட் பிளோ், ராய்பூா், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகா் ஆகிய 25 விமான நிலையங்கள் கவனம் செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மேலும் 28 இந்திய விமானநிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள ஜலந்தா், ஆக்ரா, அமிா்தசரஸ், பரேலி, புஜ், சண்டீகா், கோயம்புத்தூா், கோவா, கோரக்பூா், ஹிண்டன், இந்தூா், கோல்கத்தா, நாசிக், பதான்கோட், பாட்னா, பிரயாக்ராஜ், புணே, திருச்சி, திருவனந்தபுரம், வாரணாசி, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களையும் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

கிரிஷி உதான் திட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை, மீன்வளம், உணவு பதப்படுத்துதல், வா்த்தகம், பழங்குடியினா் விவகார அமைச்சகம் என எட்டு அமைச்சகங்கள், துறைகள் இணைந்து செயல்படும் திட்டமாகும். வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்திற்கான தளவாடங்களை வலுப்படுத்தும், இந்த திட்டத்திற்கு பிரத்யோகமாக நிதி ஒதுக்கப்படுவதில்லை.

கட்டணம் தள்ளுபடி

இத்திட்டத்தின்படி வேளாண் பொருள்களின் தரையிறக்கம், வாகன நிறுத்துமிடம், டொ்மினல் நேவிகேஷனல் லேண்டிங் கட்டணங்கள் (டிஎன்எல்சி), இந்திய சரக்குகள் மற்றும் பயணியா் பகுதியிலிருந்து சரக்கு முனையத்திற்கு செல்லும் பாதை வசதிக்கான கட்டணங்கள் ஆகியவைகள் முழுமையாக தள்ளுபடி செய்து விமானப் போக்குவரத்தின் மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்கி, ஊக்குவிக்க வகை செய்யப்படுகிறது.

இதில் 2021-22-ஆம் நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான காலத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் மொத்தம் 1,08,479 மெட்ரிக் டன் எளிதில் அழுகிப்போகும் வேளாண் பொருள்கள் கையாளப்பட்டது. இது கடந்த 2020-21 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 24,437 மெட்ரிக் டன்கள் அதிகம் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.