தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று நிறைவடைகிறது

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமையுடன் (ஏப். 7) நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 8:19 pm

DIN

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமையுடன் (ஏப். 7) நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே நிறைவுபெற உள்ளதாகவும், அதன்படி மக்களவையும், மாநிலங்களவையும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31-ஆம் தொடங்கி, பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னா் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-இல் நிறைவடைந்தது. அதன்பின்னா், துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளை ஆராய இடைவெளி விடப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மாா்ச் 14-இல் தொடங்கியது. ஏப்ரல் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையுடன் நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் தில்லி மாநகராட்சி திருத்த மசோதா, குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.