ஒமைக்ரானின் புதிய வகை: மும்பையில் முதல் பாதிப்பு
ஒமைக்ரானின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபா் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளாா்.


ஒமைக்ரானின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபா் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘கரோனா பரிசோதனை மேற்கொண்ட 376 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மும்பையிலிருந்து மட்டும் 230 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 228 போ் ஒமைக்ரான் வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய இரண்டு போ் கப்பா மற்றும் எக்ஸ்இ வகை தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவ்விரு தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.
ஒமைக்ரான் வகையான பிஏ.2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியதாக தென்படுகிறது’’ என்று தெரிவித்தாா். இந்த புதிய வகை தீநுண்மி முந்தைய கரோனா வகைகளைவிட வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...