நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் இரு அவைகளிலும் ஒருநாள் முன்னதாகவே நிறைவடைந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31-ஆம் தொடங்கி, பிப்ரவரி 1-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-இல் நிறைவடைந்தது.
அதன்பின்னா், துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளை ஆராய இடைவெளி விடப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மாா்ச் 14-இல் தொடங்கியது. ஏப்ரல் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முக்கிய மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவடைந்தது.
மேலும், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
இந்தக் கூட்டத்தொடரில் தில்லி மாநகராட்சி திருத்த மசோதா, குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

NDA கூட்டணியில் தவெக? செங்கோட்டையன் பதில்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

