இந்துக்கள் இல்லாத இந்தியாவைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யதி நரசிங்கானந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரியான நரசிங்கானந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, 'கணித கணக்கீடுகளின்படி 2029ல் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வருவார். இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வந்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்துக்கள் அல்லாத தேசமாக இந்தியா மாறும். அந்த ஒரு நிலையைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்துத்துவாவை தட்டி எழுப்பும்பொருட்டு, தர்ம சன்சத் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது' என்று தெரிவித்தார்.
இவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த டிசம்பரில் உத்தரகண்டின் ஹரித்வாா் நகரத்தில் யதி நரசிங்கானந்த் நடத்திய கூட்டத்திலும், தில்லியில் ஹிந்து யுவ வாகினி என்ற அமைப்பு நடத்திய கூட்டத்திலும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

