குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்திலிருந்து 235 கிமீ தொலைவில் உள்ள தஹேஜ் தொழில்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் இன்று காலை 3 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த துயரமடைந்தார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.