தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும்: பூபேஷ் பாகெல்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 1:29 pm

DIN


காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது:

"காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியிட விரும்புவோர் தாராளமாக வேட்புமனு தாக்கல் செய்யலாம். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

தேர்தல்கள் வரும், போகும். அதற்கெல்லாம் மனமுடைந்துவிடக் கூடாது. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார் அவர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் வரை சோனியா காந்தியே கட்சியை வழிநடத்த வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில்கூட முடிவு செய்யப்பட்டது.

கட்சியின் நலனுக்காகத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக சோனியா காந்தியும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.